பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை பாஜக சார்பில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டது :-
பீகார் மாநிலம் பாட்னாவில் அக்டோபர் 25, 2026 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றிக் கொண்டிருந்தபோது • அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், “மோடி எங்கேயும் செல்ல மாட்டார்” (அதாவது மோடிதான் பிரதமராகத் தொடர்வார்) என்று கூச்சலிட்டார்.இதற்குப் பதிலளித்த கார்கே,”மோடியின் அப்பாவும் செல்வார்” தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு ஆட்சியை விட்டுப் போவார் என்ற அர்த்தத்தில் மேடையில் கூறினார். மறைந்த பிரதமரின் தந்தை குறித்து கார்கே அநாகரீகமாகவும், அவதூறாகவும் பேசியதாகக் கூறி, மத்திய அமைச்சர் அமித் ஷா உட்பட பாஜக தலைவர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட பாஜக முன்னாள் துணைத் தலைவர் மோடி கண்ணன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பொதுவெளியில் அவதூறான மற்றும் நாகரீகமற்ற முறையில் பேசி அவமதித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மீது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனுக்கு மயிலாடுதுறையில் இருந்து ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

















