October 10, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூரில் மளிகை கடைக்குள் புகுந்து திருடி விட்டு மளிகை கடையை எரித்த மர்ம நபர்கள்

by Satheesa
October 9, 2026
in News
A A
0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூரில் மளிகை கடைக்குள் புகுந்து திருடி விட்டு திருட்டை மறைப்பதற்காக மளிகை கடையை எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை – ஆனால் காவல்துறையினரோ இது தீ விபத்து எனக்கூறி வழக்கை மூடி மறைக்க முயல்வதாக குற்றச்சாட்டு

திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட சுந்தரவிளாகம் பகுதியை சேர்ந்தவர் துர்காதேவி வயது 46. இவர் தனது கணவர் சேகர் மற்றும் தனது அண்ணன் சுப்புராஜ் ஆகியோருடன் இணைந்து கடந்த 15 வருடங்களாக இந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

15 வருடமாக இவர்கள் நடத்தி வரும் கடையில் அரிசி மூட்டை, தண்ணீர் கேன், குளிர்பானங்கள், சோப்பு, மிட்டாய்கள், தின்பண்டங்கள், சூடம், சாம்பிராணி உள்ளிட்ட அர்ச்சனை பொருட்கள், சமையல் எண்ணெய், வெல்லம், காப்பித்தூள் உள்ளிட்ட பல்வகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கம் போல இரவு 10 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு அருகே உள்ள தனது வீட்டுக்கு அனைவரும் உறங்க சென்று விட்டனர்.

நள்ளிரவில் சாலையில் சென்ற ஒருவர் வீட்டின் கதவை தட்டி அனைவரையும் எழுப்பி, கடை தீப்பிடித்து எரிவதாக கூறியுள்ளார். பதறியடைத்து எழுந்த கடை உரிமையாளர்கள் உடனடியாக வீட்டில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்து உள்ளனர்.

ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவியதால் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தை காவல்துறையினர் தீ விபத்து என வழக்கு பதிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடை உரிமையாளர்கள், மின்சாரம் எங்கும் கசியவில்லை, மின்சார ஒயர் அனைத்தும் நன்றாகத்தான் உள்ளன. இருந்த போதும்
திடீரென தீ எவ்வாறு பற்றியது என கடை உரிமையாளர்கள் சந்தேகம் எழுப்பினர்.

மேலும் கடையில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் மற்றும் ஐந்து கண்டெய்னர்களில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் கேன்கள் ஆகியவை காணவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடையின் கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 20000 ரூபாய் பணமும் காணாமல் போய் உள்ளதாக கடை உரிமையாளர்கள் கூறி உள்ளனர்.

ஆனால் இவர்கள் கூறுவதை காவல்துறையினர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் தீ விபத்து என்று கூறி வழக்கை முடித்து விட்டனர். சந்தேக வழக்கு அல்லது திருட்டு வழக்கு என பதிவு செய்தால் வேலை அதிகமாக இருக்கும் என நினைத்தார்களோ என்னவோ இதனை தீ விபத்து என அப்படியே மூடி மறைத்துள்ளனர் காவல்துறையினர்.

ஆனால் கடை உரிமையாளர்கள் இது திருட்டு சம்பவம் என்றும் திருட்டை மறைப்பதற்காக தீ வைத்து அவர்கள் எரித்துவிட்டனர் எனவும் கூறி உள்ளனர். ஆனால் நாங்கள் கூறுவது குறித்து காவல்துறையினர் விசாரணை கூட மேற்கொள்ள மறுக்கின்றனர் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் கடையின் பின்புறம் மிகப்பெரிய அளவில் கொல்லை இருப்பதாகவும், அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து திருடிவிட்டு திருட்டை மறைப்பதற்காக கடையை எரித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

15 வருடங்களாக நடத்தி வரும் கடையை நாசமாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்

பேட்டி :

  1. துர்கா தேவி – கடை உரிமையாளர்
  2. குமரேசன் – சமூக ஆர்வலர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார பணி தொய்வு

Next Post

திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் திருவாரூரில் சுகாதார பணி தொய்வு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் திருவாரூரில் சுகாதார பணி தொய்வு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

September 17, 2026
தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் காற்று ஸ்தலம்

November 1, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.