சீர்காழி கொள்ளிடம் காலை 8 மணியை கடந்தும் கடும் பனிப்பொழிவு. பொதுமக்கள் வாகன ஓட்டிகள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்.
வடகிழக்கு பருவமழை துவங்கி அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், திருமுல்லைவாசல், வைத்தீஸ்வரன் கோவில், சட்டநாதபுரம், புத்தூர், சுற்று வட்டார பகுதிகளில் காலை 8 மணியை கடந்தும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. 50 மீட்டர் தொலைவில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பணியின் தாக்கம் அதிகரித்துள்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றன. நேற்று இரவு வரை சாரல் மழை பெய்த நிலையில் அதிகாலை முதல் வானிலை மாற்றம் காரணமாக பனியின் தாக்கம் அதிகரித்துள்ள நிகழ்வு பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

















