தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து 100-வது தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் தவெகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம் :-
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து 100-வது தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் தவெக கட்சியினர் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்கள் , பேருந்து பயணிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், தரைக்கடை வியபாரிகளுக்கு இனிப்புகளை வழங்கிய கட்சியினர், அவர்களுடன் வந்த குழந்தைகளுக்கும் தங்களது கைகளால் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர்.
இந்த கொண்டாட்டத்தில் நகர செயலாளர் ராஜ்குமார், மகளிரணி யினர் என ஏராளமான தவெக தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உற்சாக கோஷங்களை எழுப்பினர்














