ஆடிப்பெருக்கு விழாவையொட்டி மயிலாடுதுறை காவிரி ஆற்றில் கரையில் பாரம்பரிய முறையில் காப்பரிசி காதோலை கருகுமணி வைத்து மஞ்சள் கயிறு கட்டி பக்தர்கள் வழிபாடு, காவிரி கரை காவேரி அம்மன் ஆலயத்தில் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் வழியே காவிரி ஆறு ஓடுகிறது. இங்கு உள்ள துலா கட்ட தீர்த்தம், 16 தீர்த்த கிணறுகள் உள்ள புனித இடமாகும் காசிக்கு இணையான இடமாக இது கொண்டாடப்படுகிறது. இன்று மயிலாடுதுறை காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கினை முன்னிட்டு, காவிரி அன்னையை கன்னிப் பெண்ணாக நினைத்து காதோலை கருகமணி காப்பரிசி கண்ணாடி வளையல் மஞ்சள் குங்குமம் வைத்து காவிரி மண்ணை பிடித்து வைத்து அதற்கு தீபமிட்டு வழிபாடு செய்தனர். மஞ்சள் நூலினை கைகள் மற்றும் கழுத்தில் பெண்கள் கட்டிக் கொண்டனர். புதுமண தம்பதியினர் தாலி பிரித்து கட்டிக் கொள்ளும் பாரம்பரியமான சடங்கை காவிரி கரையில் மேற்கொண்டனர். காவிரியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் நகராட்சி மூலம் காவிரி ஆற்றின் உள்ளே அமைந்துள்ள பிரம்மாண்ட புஷ்கர தொட்டியில் நிலத்தடி நீர் மூலம் தண்ணீர் நிரப்பி அதில் பக்தர்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர். தொடர்ந்து காவிரி கரையில் அமைந்துள்ள காவேரி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இயற்கையின் கருணையால் அடுத்த இரண்டாவது தண்ணீர் வரவேண்டும் என்று பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்..














