காவிரி கடலுடன் கலக்கும், சங்க முக தீர்த்த பகுதியான காவிரி பூம்பட்டினத்தில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுமண தம்பதியினர், தாலி பாக்கியம் வேண்டி தாலிக்கயிறு பிரித்து மீண்டும் கட்டும் பாரம்பரிய நிகழ்ச்சியை மேற்கொண்டு வழிபாடு செய்தனர் :-
ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்படுகிறது இன்று காவிரி ஆறு மற்றும் புண்ணிய தீர்த்த பகுதிகளில் புதிதாக திருமணமான தம்பதியினர் தாலி பாக்கியம் வேண்டி தாலி கயிறு பிரித்து மீண்டும் கட்டிக் கொள்வது வழக்கம். மேலும் திருமண தினத்தன்று அணிந்திருந்த மாலைகளை புண்ணிய தீர்த்தங்களில் விட்டு வழிபாடு செய்வர்கள். இன்று ஆடிப்பெருக்கு முன்னிட்டு, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாரில் சங்க முக தீர்த்த பகுதியில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த புதுமண தம்பதியினர் பழ வகைகள், பச்சரிசி, மாவிளக்கு ஏற்றி காவேரி அம்மனுக்கு வழிபாடு செய்தனர், தொடர்ந்து கல்யாண மாலைகளை சங்க முக தீர்த்த பகுதியில் இட்டும், தாலி கயிறு திரித்து புதிதாக மாற்றியும் பாரம்பரிய முறையில் வழிபாடு மேற்கொண்டனர்.















