மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே ஏற்கனவே உள்ள செல்போன் டவருக்கு அருகாமையிலேயே புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு , பணிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சியில் புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2002 ஆம் ஆண்டு மயிலாடுதுறை பகுதியில் செல்போன் டவர் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் ஒப்பந்ததாரர்கள் இடத்தினை தேர்வு செய்த போது பொதுமக்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்துள்ளனர். இறுதியாக அமுதம் நகரில் டவர் அமைக்க இருந்த நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இதனிடையே நீதிமன்றத்தை நாடி அப்பகுதியில் உரிய பாதுகாப்போடு தவற அமைக்க தனியார் நிறுவனம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று ஒப்புதல் அளிக்கப்பட்ட அமுதம் நகரில் டவர் அமைக்கப்படாமல் அதற்கு அருகே வள்ளாலகரம் ஊராட்சியில் உள்ள சொக்கலிங்கம் நகரில் டவர் அமைக்கும் பணியை துவங்கியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பணிகளை தடுத்து நிறுத்தினர். ஏற்கனவே புதியதாக டவர் அமைக்கும் பகுதிக்கு அருகே மற்றொரு செல்போன் டவர் இருக்கும் பட்சத்தில் மீண்டும் புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர். இந்த டவர் அமைப்பதன் காரணமாக தங்கள் பகுதியில் உள்ள பலருக்கும் புற்றுநோய் மற்றும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் சூழல் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த டவர் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி அனுமதி பெற்றுள்ள அமுதம் நகரில் அமைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
பைட் :-
செந்தில் – பொதுமக்கள்
ஜெயந்தி – பொதுமக்கள்













