நாங்கள் மட்டும் சிங்கப்பெண்கள் இல்லை, நீங்களும் சிங்க பெண்கள் தான் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவலர்கள் , எப்போது வேண்டுமானாலும் பயப்படாமல் புகார் அளிக்கலாம் என உதவி எண்களை வழங்கினர் :-
தமிழ்நாட்டில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை நேற்று முன்தினம் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் துவக்கி வைத்தார். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு உதவி ஆய்வாளர் மற்றும் நான்கு பெண் காவலர் அடங்கிய சிங்கப்பெண் சிறப்புபடை தொடங்கப்பட்டது. மேலும் காவல்துறை தொலைதொடர்பு கருவி பொருத்தப்பட்ட நான்கு சக்கர வாகனமும் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்க பெறும் போது அப்பகுதிக்கு விரைந்து சென்று இவர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதனிடையே இன்று மயிலாடுதுறை நகரப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் இருந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்மணிகளிடம் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினர். அப்போது நாங்கள் மட்டும் சிங்க பெண்கள் இல்லை நீங்களும் சிங்கப்பெண்கள் தான் என தெரிவித்து ஏதேனும் பெண்களுக்கு புகார் இருந்தால் 181 என்ற எண்ணிற்கும் , பெண் குழந்தைகள் தொடர்பான புகார் இருப்பின் 1098 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என அப்போது ன தெரிவித்தனர். நமது முதலமைச்சர் பெண்கள் பாதுகாப்பிற்காக கொண்டு வந்த திட்டம் தான் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அதனால் அனைவரும் பயப்படாமல் உங்களது புகார்களை எந்த நேரமாக இருந்தாலும் தெரிவிக்கலாம் என பொதுமக்களிடம் கூறினர்.














