திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் 25க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற மருத்துவமனைகளின் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தன்னார்வமுடன் ஒன்றிணைந்து நடத்திய மருத்துவ முகாமில் தனக்கு கிடைக்காதது மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று யார் நினைக்கிறார்களோ அவர்கள் தான் அடுத்த தலைமுறைக்கு தேவைப்படுகிற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என புகழாரம்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வீட்டு வசதி வாரியம் பகுதியில் அமைந்திருக்கும் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மேம்பாலம் அருகே IFPWD உடன் இணைந்து 6TH SIGMA HEALTHCARE மக்கள் நல பயணம் என்கிற தலைப்பில் இந்தியா முழுவதும் உள்ள 25க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற மருத்துவமனைகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் தன்னார்வம்புடன் ஒருங்கிணைத்து பொதுமக்கள் சிறுவர் சிறுமியர் மாற்றுத்திறனாளிகள் என பலதரப்பட்ட மக்களுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய்முதல் இருதயம் சார்ந்து ஏற்படுகின்ற பிரச்சனைகள் வரை அனைத்து வியாதிகளுக்கும் உயர் ரக மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சமூக நலத்திட்ட நிகழ்ச்சி முகாமை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருதுநகராக கலந்து கொண்ட திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் பேசும் பொழுது…
எந்தவித லாப நோக்கமும் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் புகழ்பெற்ற மருத்துவமனையில் இருந்து தன்னார்வனுடன் ஒன்றிணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சேவை செய்கிறார்கள். இந்த உலகில் தனக்கு எது கிடைக்கவில்லையோ அது மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அடுத்த தலைமுறைக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என புகழாரம் சூட்டினார்..
இதனை தொடர்ந்து பேசிய 6th Sigma healthcare நிறுவனர் அருண் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருப்பதி அதே கருத்தை வலியுறுத்தி பேசியதை பிரபல தனியா தொலைக்காட்சி செய்கை மொழி வாசிப்பாளர் கீழே அமர்ந்திருந்த மாற்று திறனாளிகளுக்கு புரியும் வகையில் செய்கை மொழியில் செய்து காட்டினார்.
மேலும் நிகழ்ச்சியை தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வாகனம் வேட்டி புடவை போன்ற ஆடைகள் மளிகை சாமான்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் மௌண்டைன் மெடிசின் சொசைட்டி ஆப் இந்தியாவின் தலைவர் டாக்டர் பிரதீப் பரத்வாஜ் APCH இயக்குனர் டாக்டர் ஆர் ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.















