தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் 500க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா.லட்சுமணன் ரத்தம் கொடுத்து ரத்ததான முகாமினை தொடங்கி வைத்து தலைமை தாங்கினார்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இம்முகாமில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று 500க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்தனர். ரத்ததானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த முகாம், ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.
முகாமில் திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் வானூர் சட்டமன்ற உறுப்பினர் கௌதம்,மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், மற்றும் மாவட்ட,ஒன்றிய, பேரூராட்சி, கழக நிர்வாகிகள் ஏராளமாக கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்
இந்த முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தவர்களுக்கு இறுதியில் நற்சான்று வழங்கப்பட்டது .







