கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் த.வெ.க அரசின் 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சியினர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து அளித்தனர்- இதில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து த.வெ.க கட்சியினர் சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றி கழக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 100 நாட்கள் நிறைவடைந்ததை கொண்டாடி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பாக நாகர்கோவிலில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. இதில் சமபந்தி விருந்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தூய்மை பணியாளர்களோடு சேர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வானது தமிழக வெற்றி கழக நிர்வாகி பால்ராஜ் முன்னிலையில் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அக்ஷயா கண்ணன் மற்றும் தமிழக வெற்றி கழக மாவட்ட ஒன்றிய நகர வார்டு செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர் நிர்வாகிகள் தூய்மை பணியாளர்கள் அனைவரும் சமபந்தி விருந்து அளித்த த.வெ.க வினரை பாராட்டி வாழ்த்தி சென்றனர்.
















