May 7, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

பஞ்சபூதத் தலங்கள் – நீர் ஸ்தலம் – திருவாப்புடையார் கோயில்

by Satheesa
October 30, 2025
in Bakthi
A A
0
பஞ்சபூதத் தலங்கள் – நீர் ஸ்தலம் – திருவாப்புடையார் கோயில்
0
SHARES
9
VIEWS
Share on FacebookTwitter

மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் ‘நீர் ஸ்தலம் கார்த்திகையில், திருவாப்புடையாரை தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்தால், சகல செல்வங்களும் கிடைக்கப் பெறலாம். வீட்டின் தரித்திரம் விலகும். தடைப்பட்ட மங்கல காரியங்கள் நடந்தேறும் என்பது ஐதீகம்.

மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலுக்கு வடக்கே செல்லூர் எனும் பகுதியில், வைகைக் கரைக்கு அருகில் கோயில் கொண்டு, தன்னை நாடி வருவோர்க்கு அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் திருவாப்புடையார்.

பாண்டிய மன்னர் ஒருவர், தீவிர சிவபக்தர். ஒருநாள்கூட, சிவபூஜை செய்யாமல் உணவு எடுத்துக்கொள்ளமாட்டார். ஒருநாள், வேட்டையாட வனத்துக்குச் சென்றவர், அங்கே ஒரு மானைக் கண்டார். அதன்மீது அம்பு தொடுத்தார். ஆனால், அந்த மான் அம்பு தப்பி ஓடியது. மானை விரட்டியபடி பின்தொடர்ந்தார் மன்னர். ஆனாலும் அவரால் மானைப் பிடிக்கமுடியவில்லை.

பிறகு, ஓடி வந்த களைப்பில் மூச்சு வாங்கத் தவித்த மன்னரை, உணவு எடுத்துக் கொள்ளும்படி அமைச்சர்கள் தெரிவித்தனர். ஆனால் மன்னரோ, ‘சிவ பூஜை செய்யாமல் சாப்பிடமாட்டேன்’ என உறுதியுடன் தெரிவித்தார். பசியின் காரணமாக களைப்பும் மயக்கமும் அடைந்தார். செய்வதறியாது அமைச்சர்கள் தவித்தார்கள்.

தளபதிக்குச் சட்டென்று ஒரு யோசனை மரத்துண்டு ஒன்றை எடுத்து தரையில் ஊன்றினார். அது நிலத்தில் அழுத்தமாக பதிந்து நின்றது. அரசே அதோ பாருங்கள், சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார் ஈசன்! என்று சொல்ல அதைக் கண்டு பரவசமான மன்னர், அந்த மரத்துண்டை லிங்கமூர்த்தம் என்று நினைத்து, மனம் ஒன்றிப் பூஜைகள் செய்தார். பிறகு, திருப்தியுடன் சாப்பிட்டார்.

அதையடுத்து, சகஜ நிலைக்கு வந்த மன்னர், அவர் பூஜை செய்த இடத்தைப் பார்த்துவிட்டு, என்ன இது மரத்துண்டு போல் அல்லவா இருக்கிறது? என்று அதிர்ந்து போனார். பின்னர், மரத்துண்டாக இருந்தால் என்ன என் சிவன் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறான். இத்தனை காலமும் நான் செய்த பூஜைகள் மிகுந்த பக்தி சிரத்தையுடன் செய்யப்பட்டதாக நீ கருதினால், இதோ இந்த மரத்துண்டில் எழுந்தருளி, காட்சி தருவாயாக! என்று பிரார்த்தித்தார்.

பிரார்த்தனை பலித்தது. மரத்துண்டில் லிங்க மூர்த்தமாகக் காட்சி தந்தார் இறைவன். அந்த இடத்தில், அழகிய ஆலயம் கட்டப்பட்டது. அதையடுத்து, கோயிலைச் சுற்றி மக்களும் குடியேறினர். மண்ணில் ஆப்பு அடித்ததுபோல் அழுத்தமாக நின்ற மரத் துண்டு லிங்க மூர்த்தமாகக் காட்சியளித்த இடம் ஆப்பனூர் என்று அழைக்கப்பட்டது. சிவனின் பெயர் திருவாப்புடையார் ஆனது.

மதுரையம்பதியின் பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலம் என்றும், மதுரையில் சம்பந்தர் பெருமான் பாடிய 2-வது தலம் என்றும், பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட 4-வது கோயில் என்றும் போற்றப்படுகிறது திருவாப்புடையார் கோயில். மலைகளில் மேரு, பசுக்களில் காமதேனு, கொடையில் மேகம் என இருப்பதைவிட அளவிற் பெரிய திருவுளம் கொண்டவர் திருவாப்புடையார் என்பர்.

இவரைத் தரிசித்தால், மற்ற புண்ணிய தலங்களின் மூர்த்திகளைத் தரிசித்த பலன் உண்டு என்கிறது ஸ்தல புராணம். அம்பாளின் திருநாமம் – ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகை. ஸ்ரீஅனுக்ஞை விநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீநடராஜர் ஆகியோரும் தனிச் சந்நிதிகளில் அருள்கின்றனர். ஸ்தல தீர்த்தம் இடப தீர்த்தம். ஸ்தல விருட்சம்- கொன்றைஎன்கிறது ஸ்தல புராணம்.

ஐப்பசி அன்னாபிஷேகம் இங்கே விசேஷம். விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பச்சரிசி சாதத்தை வடித்து, அதனை லிங்கத் திருமேனியில் சார்த்துவர். கருகுமணியால் காதணி, கழுத்தில் புடலங்காய் மாலை என அணிந்தபடி காட்சி தரும் லிங்கத் திருமேனியை தரிசிக்கலாம். பூஜை முடிந்ததும் லிங்கத் திருமேனியின் சிரசில் உள்ள சாதத்தை எடுத்து வைகையில் கரைப்பார்கள்.

thiru aapudaiyar

இதனால், அந்த நதி இன்னும் புண்ணியம் பெறுவதாக ஐதீகம். மீதமுள்ள சாதத்தைப் பிரசாதமாக வழங்குவர். இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட, வியாபாரம், விளைச்சல் பெருகும். குபேர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல், கார்த்திகை மாதத்தில் திருவாப்புடையார் கோயிலில் சிறப்பு பூஜைகளும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறும்.

கார்த்திகை சோம வாரத்தில் சிவனாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். கார்த்திகையில் திருவாப்புடையாரை வணங்கினால், சகல செல்வங்களும் வந்துசேரும். வீட்டின் தரித்திரம் விலகும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும். சிக்கல்களையெல்லாம் தீர்த்தருள்வார் திருவாப்புடையார்

Tags: aanmigambakthimaduraisiven storysiven templetamilnaduTiruvapudaiyar temple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விஜய்க்கும் சீமானுக்கும் அழைப்பு விடுத்த ஸ்டாலின்

Next Post

விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் !

Related Posts

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
Bakthi

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
Bakthi

நாகை அருகே பழமை வாய்ந்த ராந்திமங்கலம் கிழக்கு புனித ஆரோக்கிய மாதா ஆலய திருத்தேர் பவனி கோலாகலம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
Bakthi

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற மாப்படுகை சுமங்கலி காளியம்மன் ஆலய 43ம் ஆண்டு தீமிதி திருவிழா

May 5, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்
Bakthi

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
Next Post
விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் !

விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026

மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

0
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

0
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.