இந்திய புலிகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக கோடைகால கணக்கெடுப்பு பயிற்சியானது, தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பின் வழிகாட்டுதலின்படி தலைமை வன பாதுகாவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் உத்தரவின்படியும், துணை இயக்குநர் ராஜேஷ் அறிவுரையின்படி திருப்பூர் வனக்கோட்டத்தில் நேற்று முதல் 17ம் தேதி வரை 8 நாட்கள் கோடைகால புலிகள், இதர மாமிச மற்றும் தாவர உண்ணிகளின் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது.