திருவாரூர் அருகே திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம்,கூத்தாநல்லூர் தாலுக்கா, திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுள்ள நெல்லி மரம் இக்கோயிலின் தல விருச்சம் ஆகும்.
பரணி நட்சத்திரம் உள்ளவர்கள் பரணி நட்சத்திரம் அன்று இந்த ஆலயத்தில் நெய் தீபம் ஏற்றி சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் தொழில் முயற்சி கைகொடுக்கும் மேலும் திருஞானசம்பந்தர் அருளிய தேவார திருப்பதிகத்தையும் திருநாவுக்கரசர், சுந்தரர் அருளிய சோத்திரப்பாடல்களையும் பெற்ற சிறப்புடைய தலமாகவும் விளங்குகிறது.
சித்திரை 7 ஆம் தேதியிலிருந்து இத்திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் அதன் முக்கிய நிகழ்வான இரண்டாவது வருட தேரோட்டம் விழா இன்று நடைபெற்றது. சுவாமி திருத்தேரில் தியாகராஜராக எழுந்தருளினார். இந்தத் திருத்தேர் திருநெல்லிக்காவல் நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆரூரா தியாகேசா என கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்













