- சென்னையில் மழை வெள்ளம் வடிவதற்கு திமுக செய்த பணிகளை காரணம் இவர்கள் ஒரு மண்வெட்டி அளவு மண்ணை கூட எடுக்கவில்லை.எதிலும் வெளிப்படை தன்மை இல்லாத ஒரு மர்மமான அரசாக தற்போதைய அரசு உள்ளது. சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது அதைப்பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. ஆளும் கட்சிக்கு பயம் போய்விட்டது.நாங்கள் கொடுத்த டெண்டரை காரணமே இல்லாமல் ரத்து செய்கிறார்கள் காரணம் இவர்கள் டெண்டர் விட்டு பணத்தை எடுப்பதற்காக. முதல்வர் சினிமா வசனம் போல் அரசு பணத்தை தொட மாட்டேன் தொட்டவர்களின் விடமாட்டேன் என்கிறார் அதேபோல் வாங்கவும் மாட்டேன் வாங்கியவர்களை விடவும் மாட்டேன் என சொல்லட்டும்.காங்கிரஸ் எல்லாம் ஒரு கட்சியே கிடையாது அது செத்துப்போன கட்சி அவர்களைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஜென்மத்திலும் அவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள். புதியதாக இரண்டு ரசிகர்கள் அரசியல் நோக்கில் செயல்படுவது குறித்து கேட்டதற்கு, எல்லோரும் எம்ஜிஆர் விஜய் போல் ஆகிவிட முடியாது இது எல்லாம் நிலைக்காது. ஒருவன் இளநீர் கடை வைத்ததை பார்த்து மற்றொருவன் வைத்த கதையாக உள்ளது.திமுகவின் கூட்டணி கட்சிகள் மீண்டும் திமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது என கேட்டதற்கு இப்போது கொள்கை கோட்பாடு முக்கியமில்லை சீட்டு தான் முக்கியம் ஆக யார் எங்க இருப்பார்கள் என சொல்ல முடியாது – காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேட்டி.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்து பேட்டியில்,பருவமழை தொடர்பாக தற்போதைய அரசு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டதற்கு, எவ்வளவு பாதுகாப்பு செய்திருந்தாலும் கட்டுக்கடங்காத மழை வந்தால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதனை கட்டுப்படுத்தும் அளவிற்கு நிர்வாகத்தை செய்ய வேண்டும் அதுதான் முறை. இந்த ஆட்சியில் அனைத்துமே மறைமுகமாக உள்ளது எதுவுமே வெளிப்படை தன்மையோடு இல்லை. பருவமழை காரணமாக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்பதை அரசு முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கே அது குறித்து தெரியவில்லை. அதை விட்டுவிட்டு வண்டியில் சென்று ஆய்வு செய்வது, மரத்தை வெட்டுவது நிரந்தரமல்ல. எல்லாவற்றிலும் வெளிப்படை தன்மை வேண்டும் ஆனால் தற்போது இருப்பவர்கள் எந்த விஷயத்திலுமே வெளிப்படைத்தன்மையே கிடையாது.உதாரணமாக மின்சாரம் வாங்குவதிலும் வெளிப்படை தன்மை இல்லை. நம்மிடம் போதிய அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்ய வசதி இருந்தும் ஏன் வெளியில் இருந்து வாங்குகிறோம் என இவர்கள் கூறுவதில்லை. எவ்வளவு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை சொல்ல மறுக்கும் இவர்கள் எவ்வளவு வாங்குகிறோம் என்பதை மட்டும் சொல்கிறார்கள்.அப்போதைக்கு எதையோ சொல்லி விட்டு செல்கிறார்கள். ஒரு ஒளிவு மறைவு இல்லாத அரசாங்கம் இருக்க வேண்டும், இது ஒரு மர்மமான அரசாங்கமாக உள்ளது.சட்டம் ஒழுங்கு கொஞ்சம் கூட கிடையாது. காரணம் போலீசாரிடம் சரியான அணுகுமுறை உள்ளதா என தெரியவில்லை. ஆளும் கட்சியினர் தான் அதிக போதைப்பொருள் வைத்திருப்பதாக பத்திரிகைகளில் பார்க்கிறோம். இந்த செய்திகளுக்கு எல்லாம் ஆளும் கட்சி விளக்கம் கொடுக்க வேண்டும் ஆனால் அதையும் கொடுப்பதில்லை, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பதையும் தெரிவிப்பதில்லை. ஆளும் கட்சிக்கு கொஞ்சம் கொஞ்சமாக பயம் விட்டு போய்விட்டது. நாம் தான் ஆளும் கட்சி நாம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். அதனுடைய விளைவு சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது அதைப் பற்றி இவர்கள் கவலைப்படவில்லை.புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தான் சென்னையில் மழை வெள்ளம் விரைவாக வடிகிறது, அதற்கு நாங்கள் எடுத்த நடவடிக்கையே காரணம் என அமைச்சர்கள் கூறியது குறித்து கேட்டதற்கு,இவர்கள் ஒரு மண்வெட்டி மண்ணை கூட எடுக்கவில்லை. இன்றைக்கு சென்னையில் ஓரளவுக்கு வெள்ளம் வடிந்துள்ளது என்றால் அது நாங்கள் செய்து விட்டுப் போன பணிகளால் தான். இவர்களை தைரியமாக சொல்ல சொல்லுங்கள் இத்தனை கால்வாய்களை கட்டியுள்ளோம், இவ்வளவு தூரம் தூர்வாரி உள்ளோம் என. ஆவுனா டெண்டரை கேன்சல் செய்கிறார்கள், டெண்டர் வைத்த பணிகள் நடக்கிறதா இல்லையா என்பதை பார்த்து ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை விட்டுவிட்டு உடனே டெண்டர் ரத்து என்பது இவர்கள் டெண்டர் விட்டு பணம் வாங்க நடவடிக்கை எடுக்கிறார்கள். இவர்களால் புதிதாக ஒரு வேலையை தேர்ந்தெடுக்க முடியவில்லை அதில் டெண்டர் வைக்க முடியவில்லை. முதல்வர் சொல்கிறார் நான் அரசு பணத்தை தொட மாட்டேன் தொட்டவர்களையும் விடமாட்டேன் என்கிறார். அது சரி அரசின் பணத்தை யாராலும் தொட முடியாது, அதே சமயம் மற்றவர் கொடுக்கும் பணத்தை நாங்கள் வாங்க மாட்டோம் வாங்குபவர்களை விட மாட்டோம் என முதல்வரால் கூற முடியுமா? ஆகையால் சினிமா வசனம் போல் தொடமாட்டேன் தொட்டவர்களை விடமாட்டேன் என்பதை மட்டும் சொல்லி விடுகிறார். யாரிடமும் பணம் வாங்க மாட்டோம் வாங்கியவர்களை விட மாட்டேன் என முதல்வரை கூற சொல்லுங்கள் பார்ப்போம் அப்படி சொன்னால் ஒரு நாளைக்கு 20 புகார் வரும்.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் உள்நுழைய காரணம் திமுக தான் என தவெகவும், காங்கிரஸிம் குற்றம் சாட்டியது குறித்து கேட்டதற்கு, காங்கிரஸ் எல்லாம் ஒரு கட்சியே கிடையாது பாவம் அது செத்துப் போன கட்சி அதைப் பற்றி என் பேசுகிறீர்கள். எஸ் ஐ ஆர் ஐ ஆரம்பத்திலிருந்து எதிர்த்தது நாங்கள்தான். அன்றைக்கு எல்லாம் இவர்கள் எதிர்க்கவும் இல்லை ஒன்றும் இல்லை. வேண்டுமானால் பந்தயம் கட்டச் சொல்லுங்கள் அதை அறிமுகப்படுத்தியதில் இருந்து எதிர்த்து வந்தவர்கள் நாங்கள். இப்ப ஏதோ வெளிநடப்பு செய்வது போல் செய்கிறார்கள். காங்கிரஸ் எல்லாம் நமத்து போன சமாச்சாரம், அந்த கட்சியை பேசாமல் இருப்பதே நல்லது இந்த ஜென்மத்தில் ஆட்சிக்கு வராது. தமிழ்நாட்டில் இரண்டு நடிகர்கள் புதியதாக அரசியல் நோக்கத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி வருவது குறித்து கேட்டதற்கு,ஒருவன் இளநீர் கடை வைத்தால் நன்றாக போனால் அதே போன்று மற்றவர்களும் வைப்பார்கள். அது போன்ற கேஸ் இதெல்லாம், இதெல்லாம் நிற்காது. ஏதோ எம்ஜிஆர் ஜோசப் விஜய் போன்று மற்றவர்கள் ஆகிவிட முடியாது.என்னை பொருத்தவரை தமிழ்நாட்டில் அரிசிக்கு இப்படி ஒரு பஞ்சம் வந்ததை நான் கேள்விப்படவில்லை. மின்சாரம், அரிசி, சட்டம் ஒழுங்கு எதையாவது ஒன்றில் இவர்கள் உருப்படியாவது செய்துள்ளார்களா? இவர்கள் விளங்காதவர்கள் எனக் கூறினார்.திமுக கூட்டணியில் இருந்து தற்போது தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மீண்டும் திமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதாக பரவும் செய்தி குறித்து கேட்டதற்கு, எந்த கட்சியிர் எப்போது சேர்வார்கள் என்று சொல்லிவிட முடியாது. சீட்டு கொடுத்தா போவார்கள், இல்லையென்றால் இங்கே வருவார்கள். தார்மீக ஆதரவு, கொள்கை, லட்சியம் என்பதெல்லாம் இப்பொழுது கிடையாது. சீட்டு தான் இப்போது லட்சியம். யார் எங்கு வருவார்கள் என சொல்ல முடியாது என துரைமுருகன் கூறினார்.
பேட்டி:துரைமுருகன் (திமுக பொதுச்செயலாளர்)

















