குடியாத்தத்தில் கூலி உயர்வு கோரியும் தடையில்லாமல் நூல் பாவு கொடுப்பதை உறுதி செய்ய கோரியும் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவாளர்கள்வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளே கைத்தறி நெசவாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கைத்தறி உரிமையாளர்கள் 8 லுங்கிகள் நெய்வதற்கு 2200 கூலி கொடுத்து வந்த நிலையில் தற்போது அந்த கூலி 1800 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் தடையில்லாமல் நூல் பாவு கொடுப்பதில்லை எனவும்குறைந்துள்ள கூலி உயர்வை கேட்டும் தொடர்ந்து நூல் பாவு வழங்க உறுதி செய்யவும் கோரி குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றபோது வட்டாட்சியர் வட்டாட்சியர் பிரியா அங்கு இல்லாததால் கைத்தறி நெசவாளர்கள் அதிகாரிகள் இல்லை எனக்கூறி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் மற்றும் வட்டாட்சியர் பிரியா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் வட்டாட்சியர் அலுவலக பகுதியில் குறிப்பான சூழல் காணப்பட்டது

















