மயிலாடுதுறை சமூக சேவை அமைப்பின் சார்பில் காவிரியில் மூன்றாம்கட்ட தூய்மைப் பணி:- 6 ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு நடைபெற்ற பணியை திருவாவடுதுறை ஆதீனக்கட்டளை தம்பிரான் தொடக்கி வைத்தார்:-
காவிரி ஆற்றை சுகாதாரமாகவும், பிளாஸ்டிக் கழிவுகளின்றி தூய்மையாகவும் பராமரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறையில் ‘தூய்மை மயிலாடுதுறை தூமன்’ என்ற அமைப்பினர் காவிரியை சுத்தப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை முதல் ஆடுதுறை வரை மூன்றுகட்டங்களாக தூய்மைப் பணி செய்ய திட்டமிட்ட அவ்வமைப்பினர் இதுவரை மயிலாடுதுறை துலாக்கட்டம் முதல் மூவலூர் வரையிலும், இரண்டாம்கட்டமாக துலாக்கட்டம் முதல் தருமபுரம் வரையிலும் என இரண்டுகட்ட பணிகளை நிறைவு செய்துள்ளனர்.
மூன்றாம்கட்டமாக மூவலூரில் இருந்து ஆடுதுறை வரை காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி இன்று தொடங்கியது. இதற்காக, அவ்வமைப்பின் நிறுவனர் ஜோதி பிரகாஷ் முன்னெடுப்பில் தன்னார்வ அமைப்பினரின் உதவியுடன் 6 ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இப்பணிகளை மூவலூரில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் இன்னும் 3 நாள்களில் மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாக பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
பேட்டி: ஜோதி பிரகாஷ்













