May 16, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நிலக்கோட்டை அருகே குண்டலபட்டி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

by sowmiarajan
February 3, 2026
in News
A A
0
நிலக்கோட்டை அருகே குண்டலபட்டி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த குண்டலபட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில், மூன்றாவது புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழாவும், 21-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவும் பக்திப் பெருக்குடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

 ஆன்மீக மணம் கமழ நடைபெற்ற இந்த விழாவானது, சித்தையன் கோட்டை ஸ்ரீ நாகரத்தின சுவாமிகள், ஸ்ரீ கல்யாணி அம்மையார் மற்றும் சாந்தி பிரியா ஆனந்தபுரி அம்மையார் ஆகியோரின் நல்லாசியோடும், ஸ்ரீதேவி ஆசிரம நிறுவனர் ஸ்ரீ செந்தில் சுவாமிகள் தலைமையிலும் முன்னெடுக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பெங்களூர் செல்வராஜ் ஏற்பாடு செய்திருந்தார். விழாவின் தொடக்கமாக மங்கல இசை முழங்க, முதற்கால யாக பூஜை, குரு பிரார்த்தனை, தேவதா அணுகஞ்சை மற்றும் மகா சங்கல்பம் ஆகிய வழிபாடுகள் முறையாக நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனித நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தங்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டன.

​யாகசாலை பூஜைகளின் நிறைவாக, வேத விற்பன்னர்கள் புனித நீர் அடங்கிய கலசங்களைச் சுமந்து கோவிலைச் சுற்றி வலம் வந்தனர். பின்னர், சர்வ சாதகம் சோழவந்தான் கும்பாபிஷேக சிரோன்மணி பிரம்மஸ்ரீ பாலமுருகன் சுவாமிகள் தலைமையில், ஜோதிட ரத்னா ரிஷிகேசன் சிவம் உள்ளிட்ட வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க, ஸ்ரீ பாலமுருகன் சுவாமி விமான கோபுரத்திற்கும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற அந்தப் புனிதமான நேரத்தில் வானத்தில் கருடாழ்வார் வட்டமிட்டு தரிசனம் தந்த நிகழ்வு, அங்கிருந்த பக்தர்களிடையே நெகிழ்ச்சியையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது.

​இந்த ஆன்மீக சங்கமத்தில் குண்டலபட்டி, சிறு நாயக்கன்பட்டி, நிலக்கோட்டை, அணைப்பட்டி, சித்தர்கள் நத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு “அரோகரா” முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் முடிந்தவுடன் மூலவர் ஸ்ரீ பாலமுருகன் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளைக் விழா குழு உறுப்பினர்கள் குண்டலப்பட்டியை சேர்ந்த வீரமணி, சிவா, முருகன், சந்திரசேகர் மற்றும் கிராம முக்கியஸ்தர்களும் தன்னார்வலர்களும் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

Tags: BalamuruganCeremony KundalapattiConsecrationmurugantemple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா கோலாகல கொண்டாட்டம்

Next Post

அகிம்சை ஒளியில் அறவழிப்பயணம்: அண்ணல் காந்திக்கு மின்வாரிய தொழிலாளர்கள் வீரவணக்கம்!

Related Posts

கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை
News

திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை

May 15, 2026

திருவாரூரில் 7000லஞ்சம் பெற்ற வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  விசாரணை அலுவலகத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை & மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விற்பனை மையம் திறப்பு

TVKதலைவர் விஜய் முதலமைச்சரானதை முன்னிட்டு மக்களுக்கு அன்னதானத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.