புழலில் லாரி உரிமையாளர் மீது அவதூறு பரப்பி பணம் பறிக்க முயன்ற நான்கு பேர் கைது.
புழல் அருகே லாரி லாரி லாரி உரிமையாளர் மீது அவதூறாக வாட்ஸ் அப்பில் குழுவில் பரப்பி அவரிடமிருந்து பணம் பறிக்க முயன்ற நான்கு பேர் கைது
புழல் அடுத்த லட்சுமிபுரம் செக்கெட் காங்கேயம் சேர்ந்தவர் ஜான் ரொசாரியோ( வயது 45 )
இவர் மணலி புதுநகர் அருகே பிரிட்டிஷ் ட்ரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், அவரிடம் ஓட்டுநராக பணிபுரிந்த தஞ்சாவூர் மாவட்டம் வெங்கடேசமுத்திரம் பகுதியை சேர்ந்த கோபால் ராஜ் ( வயது 55) மற்றும் விருதுநகர் தென்னல்குடி பகுதியைச் சேர்ந்த அருண் பாண்டியன் (வயது 29 )ஆகிய இருவரும் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா அடுத்த அடுத்த தெனாலி மாவட்டத்திற்கு தனது லாரியில் சரக்கு டெலிவரி செய்ய கோபால்ராஜ் என்ற ஓட்டுநரிடம் கொடுத்தனுப்பினார். ஆனால் பாதி வழியிலேயே லாரி விபத்துக்குள்ளானதால், உரிமையாளர் ஜான் ரொசாரியோ, விபத்தில் காயமடைந்த ஓட்டுநரை சென்னைக்கு அழைத்து வந்து அவருக்கு மருத்துவ உதவி மற்றும் குடும்ப செலவிற்கு பணம் கொடுத்து உதவியதாக கூறப்படுகிறது.
மேலும் மற்றொரு ஓட்டுனர் அருண் பாண்டியன் என்பவரின் நடத்தை சரியில்லாத காரணத்தினால், அவரை பணியில் இருந்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நீக்கிவிட்டார். இதனால் இருவரும் கூட்டாக ஒன்று சேர்ந்து டிரான்ஸ்போர்ட் உரிமையாளரிடம், மேலும் மேலும் பணம் பறிக்க திட்டம் தீட்டி, நேரடியாக அவரிடம் சென்று பணம் கேட்டதாக தெரிகிறது.
அவர் பணம் கொடுக்க மறுத்ததால், குடியாத்தத்தை சேர்ந்த அப்துல் கலாம் அறக்கட்டளை அமைப்புசாரா தொழிலாளர்கள் மூலமாக பணத்தை பெற முயற்சிகள் மேற்கொண்டனர்.
அந்த அறக்கட்டளையில் நிர்வாகிகளாக வினோத் (வயது 36) தர்மராஜ் என்ற ரைட் ராஜா (வயது 26) ஆகியோர்கள் உரிமையாளரை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசிய போது, அவர் பணம் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தனது வாட்ஸ் அப் குழுவில் உரிமையாளரை பற்றியும் டிரான்ஸ்போர்ட் கம்பெனியை பற்றியும் அவதூறாக பதிவு செய்து அதனை பல ஓட்டுநர்கள் பார்க்கும் படி செய்தனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான லாரி உரிமையாளர் ஜான் ரொசாரியோ இது பற்றி புழல் காவல் நிலையத்தில், புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வசந்த் ராஜா இது குறித்து வழக்கு பதிவு செய்து, அவதூறு பரப்பிய குடியாத்தம் பகுதியை சேர்ந்த விவேக், தர்மராஜா மற்றும் இதற்கு காரணமான லாரி ஓட்டுநர்கள் கோபால் ராஜ், அருண் பாண்டியன் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டதாக தெரிகிறது. இது பற்றி புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அவர்கள் நான்கு பேரின் மீது வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு வருகிறார்.

















