மயிலாடுதுறையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார். ரூ.1.02 கோடி இலக்கீடு நிர்ணயம்;- உங்கள் கையால் துணியை கொடுங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்து துணியை பெற்று பெண் நெகிழ்ச்சி:-
தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணி ரகங்களை இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர முக்கிய பங்காற்றி வருகின்றன. காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை இன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் துவங்கி வைத்தார். இதில் சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், சேலம் பட்டுப்புடவைகள், திருபுவனம் உள்ளிட்ட பல்வேறு ஊரில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உரைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள் திரைச்சீலைகள், கால் மிதியடிகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்ட மாவட்ட இந்த ஆண்டு கடலூர் மண்டலத்திற்கு ரூ.8.88 கோடி விற்பனை குறியீடாகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ரூ.74.50 லட்சமும் சீர்காழி விற்பனை நிலையத்திற்கு ரூ.27.50 லட்சமும் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர சிறு சேமிப்பு திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப மாதந்தோறும் ரூபாய் 300 முதல் ரூ.3000 வரை 11 மாத தவணைகள் மட்டும் செலுத்தி 12-வது மாத தவணையை கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொள்வதுடன் கூடுதல் சேமிப்புக்கு பருத்தி மற்றும் பட்டு ரக துணிகளை வாங்கி பயன்பெறலாம் என்றும் 30 சதவீதம் வசதியுடன் அனைத்து அரசு பணியாளர்களுக்கும் கடன் விற்பனை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது என்பதால் கைத்தறிக்கு கைகொடுத்து உதவிட மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதில் பெண் ஒருவர் தான் எடுத்த துணியை மாவட்ட ஆட்சியர் கையால் வாங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கையால் துணியை பெற்று மகிழ்ச்சியடைந்தார். மண்டல மேலாளர் மாணிக்கம், துணை மண்டல மேலாளர் மாணிக்கம், துணை மண்டல மேலாளர் பிரேம்குமார், விற்பனை நிலைய பொறுப்பாளர் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

















