தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி அடைந்ததை முன்னிட்டு மயிலாடுதுறையில் கட்சியினர் பட்டாசு வெடித்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்:-
தமிழகத்தில் நடந்து முடிந்த தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. இதனை தமிழகம் முழுவதும் தவெக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தவெக சார்பாக மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியை முன்னிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தவெகவினர் பட்டாசு வெடித்த நிலையில் ட்ரம்ஸ் வாத்தியங்கள் முழங்க மகளிர் அணியினர் கேக் வெட்டினர். தொடர்ந்து ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி விட்டுக்கொண்டும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.















