டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
டாஸ்மாக் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்.
டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு நிர்வாகப் பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். கடைகளின் வாடகை, மின்சார கட்டணம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.
ஆன்லைன் பணப்பரிவர்த்தனை முறையை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. தேவையான உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். பழுதடைந்த கருவிகள் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும். தேவையான இடங்களில் புதிய கருவிகள் வழங்கப்பட வேண்டும்.
மேலும், டாஸ்மாக் பணியாளர்கள் மீது சமூக விரோத சக்திகளால் தாக்குதல் மற்றும் மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்.
காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கடந்த 25 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த 13-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 13 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வரும் 28-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
அந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கமும் முழுமையாக பங்கேற்கும்.
அனைத்து தொழிற்சங்கங்களும், டாஸ்மாக் பணியாளர்களும் ஒன்றிணைந்து இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும்.
இதன் மூலம் அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, எங்களுடைய நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.
இது குறித்து பேட்டி
பாலசுப்பிரமணியன் சிறப்பு தலைவர், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம்














