கன்னியாகுமரி மாவட்டம் செப்டம்பர் 6 காவலர் தின விழா கொண்டாட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக மறைந்த காவலர்களின் நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியவர் தொடர்ந்து ஆயுத கண்காட்சி, போக்குவரத்து விதிகள் கண்காட்சி போன்றவைகளை பார்வையிட்டார்- பொதுமக்கள் பார்வைக்காக கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 06ம் தேதி காவலர் தின விழா கொண்டாடப்பட உள்ளது இத்தினம் ஆனது 1859-ல் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டதின் நினைவாக தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின விழா கொண்டாட்ட நிகழ்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக மறைந்த காவலர்களின் நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் பின்பு மறைந்த காவலர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்ந்து காவலர்கள் தினத்தை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக ஆயுதப்படை வளாகத்தில் ஆயுத கண்காட்சி போக்குவரத்து விதிமீறல் கண்காட்சி தலைக்கவச விழிப்புணர்வு கண்காட்சி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில் அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

















