மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு வேம்படி கற்பக மகா மாரியம்மன், ஸ்ரீ கற்பக சுந்தர மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை டவுன் 1 ஆம் நம்பர் புதுத் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு வேம்படி கற்பக மகா மாரியம்மன், ஸ்ரீ கற்பக சுந்தர மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி கோயில் முன்பு யாகசாலை அமைத்து புனிதநீர் அடங்கிய கடங்கள் வைத்து கடந்த நான்காம் தேதி முதல்கால யாகசால பூஜை தொடங்கி இன்று நான்காம் கால யாகசால பூஜை நிறைவுற்றது. பூர்ணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை மேளதாள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் வந்து கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர காலங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

















