ஐந்து கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்ட போட்டியில் பங்கேற்று ஓடிய மாணவ மாணவிகளுக்கு மீண்டும் நகரத்திற்கு செல்ல வாகன வசதி ஏற்படுத்தித் தராத காரணத்தால், 108 வாகனத்தில் லிப்ட் கேட்டு பயணம் செய்த காட்சிகள் வைரல், மீண்டும் நடந்த ஐந்து கிலோ மீட்டர் தூரம் சென்ற மாணவ மாணவிகள் வேதனை:-
சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோதல் கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஐந்து கிலோ மீட்டர் தூர தொடர் ஓட்ட போட்டி இன்று நடைபெற்றது. மயிலாடுதுறையில் துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் துவக்கி வைத்த நிலையில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஓட்டப்போட்டி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்த நிலையில், நான் இருக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்று இருந்தனர். மீண்டும் அவர்கள் மயிலாடுதுறை நகரத்திற்கு திரும்பி செல்ல போதிய வாகன வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை. அரசு பேருந்துகள் அப்படியே மிகுந்த குறைவாக இயக்கப்பட்ட காரணத்தால், மாணவ மாணவிகள் ஐந்து கிலோமீட்டர் தூரம் ஓடி வந்த களைப்பு நீங்குவதற்குள் மீண்டும் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற மயிலாடுதுறையை வந்தடைந்தனர். இதில் மேலும் ஒரு பரிதாபமாக கிடைத்த வாகனங்களில் லிப்ட் கேட்டு மாணவ மாணவிகள் பிரயாணம் செய்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் சில மாணவிகள் லிப்ட் கேட்டு பயணம் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. தொலைதூரத்திற்கு போட்டிகள் வைக்கும் பொழுது பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













