சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி சாலையோர உணவு விற்பனை வியாபாரம் முடங்கியதால் வியாபாரிகள் கவலை சுகாதார சீர் கேட்டால் பாதிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம்
சீர்காழி நகராட்சி 14வது வார்டுக்கு உட்பட்ட பிடாரி வடக்கு வீதி அமைந்துள்ளது பிடாரி வடக்கு வீதி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் பாதை முறையாக கழிவுநீர் செல்லும் வகையில் இல்லாமல் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் சாலைகளில் வழிந்து வெளியேறும் சூழல் அவ்வபோகு நிலவுகிறது. அவ்வாறு கடந்த மூன்று நாட்களாக கழுமலையம்மன் கோயில் அருகே உள்ள கழிவுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் குளம் போல் ஓடுகிறது அவ்வழியாக வரும் பொதுமக்கள் கழிவுநீரா மழை நீரா என்பது தெரியாமல் அவற்றைக் கடந்து சுகாதார கேடுடன் சென்று வரும் நிலை உள்ளது வீடுகளிலும் கழிவு நீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சாலையோர இட்லி கடை வியாபாரம் கடந்த மூன்று நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் பொதுமக்கள் பெரும் கவலை தெரிவிக்கின்றனர் உடனடியாக நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் வாகன மூலம் கழிவு நீரை உறிஞ்சி வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது













