தரங்கம்பாடி அருகே கீழப்பெரம்பூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பச்சை காளியம்மன் கோயிலில் ஆடி மாத பால்குடம் காவடி திருவிழா ; நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்தும், அலகு காவடி, கூண்டு காவடி, மயில் காவடி எடுத்தும் வழிபாடு :-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரம்பூர் கிராமத்தில் வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தரும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பச்சை காளியம்மன் கோயிலில் ஆடி மாத பால்குடம் காவடி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி இன்று அதிகாலை கோவிலில் கணபதி ஹோமம் செய்யப்பட்டு பெரம்பூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் மஞ்சள் உடை உடுத்தி காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்தும், அலகு காவடி, கூண்டு காவடி, பால் காவடி எடுத்தும் மங்களப் பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருள்களுடன் பம்பை மேல வாத்தியங்கள் முழங்க பச்சைக்காளி, பவளக்காளி நடனத்துடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். அப்போது பக்தர்கள் அருள் வந்து ஆடியது அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு ஸ்ரீ பச்சை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.













