திருவாரூரில் திடீர் தீ விபத்தில் அருகே அருகே இருந்த ஏழு வீடுகள் எரிந்து சேதம் அடைந்த நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்ற ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கினார்.
திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் ஐந்து வீடுகள் முழுமையாகவும் இரண்டு வீடுகள் பகுதி அளவிலும் எரிந்து சேதம் அடைந்தன இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் நேரில் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதல் கூறினார் தொடர்ந்து அவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க பணமும் பாத்திரங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் வழங்கினார் இதேபோன்று வட்டாட்சியர் இளங்கோவன் தலைமையில் 8000 ரூபாய் அரசு உதவித்தொகையும் நிவாரண பொருட்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சிகள் திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ் மற்றும் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.















