டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.10 ஸ்டிக்கர் பிரச்னை,
ஊழியர்கள் பற்றாக்குறை, காலி மது பாட்டில்களை பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 43 டாஸ்மாக் கடைகளின் ஊழியர்கள் திருபுவனத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திற்கு சென்றதால் 43 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் அவதி. கடை வாசலில் காத்து கிடக்கும் குடிமகன்கள்:-
டாஸ்மாக் மதுபான கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கும் விவகாரம் பெரிதாகியதால் கூடுதல் விலை பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கூடுதலாக பத்து ரூபாய் சட்டத்திற்கு புறம்பாக வசூல் செய்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சம் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளுக்கு நான்கு பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும், நிர்வாகம் கொடுக்கும் மாத வாடகை இல்லாமல் கடை ஊழியர்கள் கட்டிட உரிமையாளர்களுக்கு தினசரி வாடகையாக ரூபாய் 5000 வரை கொடுக்க வேண்டிய சூழல் உள்ளதால் போதுமான வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும், காலி பாட்டில் திரும்ப பெறுவதற்கு பணியாளர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், மதுபான பெட்டி ஒன்றிற்கு இறக்கு கூலி ரூ.8 வழங்க வேண்டும், உடையும் மது பாட்டில்களுக்கு உரிய தொகையினை நிர்வாகமே ஏற்க வேண்டும், காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 43 டாஸ்மாக் கடைகளின் ஊழியர்கள், தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்றுள்ளார்கள். இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 43 டாஸ்மாக் மதுபான கடைகளும் இன்று மூடப்பட்டுள்ளன. முன்னறிவிப்பின்றி கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் மதியம் 12 மணி முதல் டாஸ்மாக் கடைகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும் தீவிர மதுப்பிரியர்கள் பலர் டாஸ்மாக் கடைகளின் முன்பு காத்துக் கிடக்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு மனமகிழ் மன்றமான மயிலாடுதுறை மனமகிழ் மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.













