நேபாள் நாட்டில் பேரிடரில் சிக்கி மாயமான மயிலாடுதுறையை சேர்ந்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட நான்கு பேரை மீட்டுத் தரக்கோரி நான்கு குடும்பத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்து நேபாளில் மீட்கப்பட்டவர்களை நேரிடையாக சென்று அடையாளம் காண்பதற்கு நான்கு குடும்பத்தில் தலா ஒருவரை நேபாள் நாட்டிற்கு அனுப்பி வைக்க கோரிக்கை:-
நேபாளம் புனித பயணத்துக்கு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 57 பயணிகள் யாத்திரை சென்று இருந்தனர். அவர்களில் 21 பேர் மட்டுமே இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் மயிலாடுதுறையை சேர்ந்த 7 பேர் சென்றிருந்த நிலையில் மயிலாடுதுறை சேர்ந்த மணிமேகலை, ரத்தினகுமார்- பூங்குழலி தமபதி ஆகிய மூன்று பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக மயிலாடுதுறைக்கு திரும்பி உள்ளனர். ஆனால் மயிலாடுதுறையை அடுத்த வள்ளாலகரம் கிராமத்தில் இருந்து யாத்திரைக்கு சென்று இருந்த உதயகுமார் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், கூறைநாடு தோப்புதெரு வெங்கட்ராமன், கழுக்காணிமுட்டம் புஷ்பலதா ஆகியோர் மாயமாகி மீட்கப்படாத நிலையில் இன்று காணாமல் போன நான்கு பேரின் குடும்பத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் காணாமல் போனவர்களில் நிலை குறித்த தகவலை தெரிவிக்க வேண்டுமாய் கோரிக்கை விடுத்து மனு அளித்தனர். பேரிடர் வெள்ளத்தில் சிக்கிய நான்குபேர்களின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில் மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தி அவர்கள் பற்றிய தகவல்களை விரைவாக தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், நான்கு குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் மீளா துயரத்தில் உள்ளதால் குடும்பத்திற்கு ஒருவர் என நான்கு பேரை நேபாளம் நாட்டிற்கு அனுப்பி வைத்து நேரடியாக மீட்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கு அரசின் சார்பில் ஏற்பாடு செய்து தரும்படி மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி; நாஞ்சில்பாலு பாஜக மாவட்டதலைவர்

















