மயிலாடுதுறை அருகே கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு ஏராளமான மாணவ குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து நடனமாடி உறியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் :-
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞானசம்பந்தர் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் கிருஷ்ணன் மற்றும் ராதை வேடம் அணிந்து பள்ளிக்கு வருகை தந்தனர். தொடர்ந்து இனிப்புகள் கொடுத்து மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்ற நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து நடனம் ஆடி கவனத்தை ஈர்த்தனர். மேலும் உற்சாகமாக நடனமாடிய குழந்தைகளை அங்கிருந்து ஆசிரியர்கள் முத்தமிட்டு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் ஒவ்வொருவரும் உரியடி போட்டியில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

















