மயிலாடுதுறை அருகே கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலை வசதி செய்து தர வலியுறுத்தியும், முறையாக குடிநீர் வழங்க கோரியும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கங்கணம்புத்தூர் ஊராட்சியில் ஜீவாநகர், காளியம்மன் கோயில் தெரு , விஏஓ அலுவலக தெரு , பிஸ்மி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது, இப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று கூறியும், 100 நாள் வேலை திட்டத்தில் அனைத்து நாட்களும் வேலையை தர வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் ஒருங்கிணைந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.















