மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி உயிரிழந்த நபரின் தந்தை திருவள்ளூர் ஆட்சியரிடம் மனு அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் சின்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அவரது இளைய மகன் ராஜரத்தினம் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்ததாகவும், கடந்த மாதம் 14-ஆம் தேதி செனனைக்கு யசென்று விட்டு மறுநாள் வீட்டுக்கு வந்து போன் செய்த போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாகவும், மறுநாள் வரை தேடி கிடைக்காத நிலையில் தமது மகன் ராஜரத்தினத்தின் நண்பர்களான நிர்மல்ராஜ், தமிழரசு ஆகியோரிடம் கேட்ட போது தங்களுக்கு தெரியாது என தெரிவித்ததாகவும்,
மது அருந்திவிட்டு வரும் வழியிலேயே உங்களது மகன் இறங்கி சென்று விட்டான் எனவும் அதற்கு மேல் எங்களுக்கு தெரியாது எனவும் , கிணற்றில் சடலமாக இருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்ததால் சந்தேகம் அடைந்து கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்து தமது மகனின் இறப்பின் சந்தேகம் உள்ளது எனவும் மகனின் நண்பர்கள் 2 பேரையும் விசாரிக்க வேண்டும் என புகார் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்த நிலையில் ஒரு மாதம் ஆகியும் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவுமர தம் மகனின் இறப்பில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்காமலும் எனது மகனின் நண்பர்களை அழைத்து கனகம்மாசத்திரம் காவல் துறையினர் விசாரிக்காமல் அலை கழிப்பதாகவும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது













