விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஆட்டோ பர்மிட் தூரத்தை 100 கிலோ மீட்டர் என அதிகப்படுத்த வேண்டும், மீட்டர் கட்டணத்தை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பேட்டி 1)ஆர்.மூர்த்தி(தலைவர் – விழுப்புரம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ)
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக அரிசி பருப்பு, மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளதால் தினகூலி தொழிலாளர்கள் உட்பட அனைவரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நெருக்கடியில் இருக்கும் ஆட்டோ தொழிலாளர்களை பாதுகாப்ப வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை த.வெ.க தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும், தினசரி மானிய விரைவில் ஆட்டோவிற்கு 5 லிட்டர் எரிபொருள் வழங்க வேண்டும், ஆட்டோ பர்மீட்டை 100 கிலோ மீட்டர் தூரம் என அதிகப்படுத்த வேண்டும்,, ரேபிடோ ரெட் டாக்ஸி, ஓலா, ஊபர் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணத்தை உடனே அறிவிக்க வேண்டும், அரசு ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும், ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ கூலி தொழிலாளர்கள் தமிழக அரசை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

















