July 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பாரியூர் குண்டம் திருவிழா: 12 டன் விறகுகள்.. தீப்பிழம்பில் இறங்கிய 1 லட்சம் பக்தர்கள்

by sowmiarajan
January 8, 2026
in News
A A
0
பாரியூர் குண்டம் திருவிழா: 12 டன் விறகுகள்.. தீப்பிழம்பில் இறங்கிய 1 லட்சம் பக்தர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ஈரோடு மாவட்டத்தின் மிக முக்கியமான ஆன்மீகத் திருவிழாவாகக் கருதப்படும் கோபி அருகே உள்ள பாரியூர் அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழா இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் எரியும் நெருப்புத் தழலில் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்திய நிகழ்வு ஒட்டுமொத்தப் பகுதியையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலின் குண்டம் திருவிழா, கடந்த மாதம் 25-ஆம் தேதி காப்புக்கட்டுதல் மற்றும் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் மஞ்சள் ஆடை அணிந்து, கடுமையான விரதத்தைத் தொடங்கினர். கடந்த 2-ஆம் தேதி திருத்தேர் நிலை பெறுதல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து 5-ஆம் தேதி மாலையில் அம்மனுக்குச் சிறப்புச் சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெற்றது. நேற்று காலை மாவிளக்கு ஊர்வலம் மற்றும் பூத வாகனக் காட்சியுடன் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் கலைகட்டின.

விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் இறங்குவதற்காக, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சுமார் 12 டன் விறகுகளைக் கொண்டு நேற்று இரவு குண்டம் திறக்கப்பட்டது. எரியூட்டப்பட்ட அந்த விறகுகள் தணலாக மாற்றப்பட்டு, விடிய விடிய ‘வீரமக்கள்’ என்று அழைக்கப்படும் தன்னார்வலர்கள் குண்டத்தைச் செப்பனிடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 50 அடி நீளமுள்ள இந்த அக்னி குண்டம் தயார் செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை ‘அம்மை அழைத்தல்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று காலை சரியாக 6 மணி அளவில், கோயில் தலைமைப் பூசாரி சிவநாதன் புனிதப் படைக்கலங்களை ஏந்தி வந்து, நந்தா தீபம் ஏற்றி குண்டத்திற்குச் சிறப்புப் பூஜைகளைச் செய்தார். “ஓம் சக்தி.. பராசக்தி” என்ற பக்தர்களின் விண்ணதிரும் முழக்கங்களுக்கு இடையே, தலைமைப் பூசாரி முதலில் தணலில் இறங்கி நடந்து சென்றார். அவரைத் தொடர்ந்து கோயில் பூசாரிகளும், நூற்றுக்கணக்கான வீரமக்களும் குண்டம் இறங்கினர்.

அதன்பின்னர், கடந்த இரண்டு நாட்களாகக் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கோயில் வளாகத்தில் காத்திருந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் வரிசையாகக் குண்டம் இறங்கினர். கைகளில் குழந்தைகளை ஏந்தியபடியும், உடல் முழுவதும் மஞ்சள் பூசியபடியும் பக்தர்கள் எரியும் நெருப்பில் எவ்வித அச்சமுமின்றி நடந்து சென்று அம்மனுக்குத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஈரோடு மாவட்டக் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Tags: celebrationcommunityheritagePractice Culturaltraditional
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால் மட்டுமே விஜய் அசைக்க முடியாத சக்தி”: அதிரடிப் பேட்டி!

Next Post

“தணிக்கை குழு மத்திய அரசிடம் உள்ளது படத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை” – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!

Related Posts

புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
News

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு
News

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026
Next Post
“தணிக்கை குழு மத்திய அரசிடம் உள்ளது படத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை” – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!

"தணிக்கை குழு மத்திய அரசிடம் உள்ளது படத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை" - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
லஞ்ச ஊழலற்ற அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசுக்கு கோரிக்கை

July 26, 2026
தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்

May 27, 2026
திருவள்ளூரில் ரூ.4.6 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

March 5, 2026
தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

February 18, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

0
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

0
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

July 27, 2026
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

July 27, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.