ஹரிஹரன்கூடல் பண்டாரவாடை கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் பால்குடம் காவடி திருவிழா வெகு உற்சாகமாக நடைபெற்றது காளி ஆட்டத்துடன் உற்சவம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் ஊராட்சி ஹரிஹரன் கூடல் பண்டாரவாடை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய பால்குடம் காவடி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது 11 ஆம் ஆண்டு விழா அம்மனுக்கு சிறப்பு பூஜை உடன் சிறப்பு யாகம் நடைபெற்று தொடங்கியது முன்னதாக விநாயகர் ஆலயத்தில் இருந்து விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் காவடி அலகு காவடி முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர் பச்சை காளி பவளக்காளி ஆட்டத்துடன் மேள வாத்தியங்கள் முழங்க இளைஞர்கள் உற்சாகத்துடன் பால்குடம் வீதி உலா வந்தனர் பின்னர் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தை வந்தடைந்த பால்குடம் காவடி பக்தர்கள் கொண்டு வந்த பால் கொண்டு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையும் நடைபெற்றது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது பிரசாதங்கள் வழங்கப்பட்டது ஹரிஹரன் கூடல் பண்டாரவாடை கிராமவாசிகள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியோர் இணைந்து சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர்.













