நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட DYFI சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கைது :-
நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் எழுந்து வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே DYFI (இனிய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு ) சார்பில் தொடர் காத்திருக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நீட் தேர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்













