கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்காக கன்னியாகுமரி மாவட்ட எல்லை பகுதிகளில் கோழி ஏற்றி செல்லும் வாகனங்களை அனைத்தும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தீவன கட்டுப்பாடு நெறிமுறைகளை கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு பின்பற்றுவதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கறிக்கோழி வாகனங்கள் மீண்டும் கறிகோழி விற்பனைக்காக எடுத்து செல்லப்பட்டது.
உற்பத்தி நிறுவனங்கள் தீவனக் கட்டுப்பாடு இல்லாமல் கோழிகளை உணவு ஏற்றி விற்பனைக்கு அனுப்புவதால்,ஒரு கிலோவுக்கு சுமார் 110 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகும் இந்த நஷ்டம் வாடிக்கையாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் பாதிப்பு-அரசு விதியை மீறி செயல்படும் உற்பத்தி நிறுவனங்கள் தீவனக் கட்டுப்பாடு செய்து கோழிகளை விற்பனைக்கு தர கேட்டு தமிழக முழுவதும் கறிக்கோழி விற்பனை நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு கறிக்கோழி வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்த நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்ட எல்லை பகுதியான ஆரல்வாய்மொழிப் பகுதியில் கறிக்கோழி ஏற்றி செல்லும் 100கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தீவன கட்டுப்பாடு நெறிமுறைகளை கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு பின்பற்றுவதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கறிக்கோழி வாகனங்கள் மீண்டும் கறிகோழி விற்பனைக்காக எடுத்து செல்லப்பட்டது.
பேட்டி: லாசர் ( தமிழ்நாடு கறிக்கோழி வணிகர்கள் கூட்டமைப்பு , கன்னியாகுமரி மாவட்ட தலைவர்)

















