முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவ சிலை மற்றும் திருவுருவபடங்களுக்கு திருவாரூரில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு திருவாரூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் திரு உருவ சிலைக்கு திமுக நகர செயலாளர் வாரை.பிரகாஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள முத்தமிழர் கலைஞரின் இல்லம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கலைஞர் இல்லத்திற்குள் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோகன், திமுக ஒன்றிய செயலாளர்கள் புலிவலம் தேவா, சேகர் கலியபெருமாள், ஐ.வி.குமரேசன், திமுக நகர செயலாளர்கள் வாரை பிரகாஷ்,பக்கிரிசாமி,தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் தியாகபாரி, திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், பொருளாளர் ரஜினிசின்னா, நகர மன்ற உறுப்பினர்கள் வரதராஜன்
உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.














