மயிலாடுதுறையில் ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு உற்சாகமாக வந்த மாற்றுத்திறனாளிகள், தவெகவினர் கட்சி கொடியுடன் முழக்கம்:-
மயிலாடுதுறை விஜயா திரையரங்கில் முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியை பார்க்க தவெக சார்பில் அனைவருக்கும் இலவசமாக டிக்கெட் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் கோபிநாத் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் ஆட்டோவில் வந்து திரைப்படத்தை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். திரைப்படத்தை பார்த்துவிட்டு உற்சாகத்துடன் திரையரங்கத்தை விட்டு வெளியே வந்த மாற்றுத்திறனாளிகள் திரைப்படம் அருமையாக உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரியும், படித்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்தனர். படத்தை பார்த்துவிட்டு தவெக கட்சி கொடியுடன் உற்சாக முழக்கமிட்டு தவெகவினர் கொண்டாட்டத்துடன் சென்றனர்.















