தமிழக வெற்றி கழகத்தை பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னரை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் தமிழக வெற்றி கழகத்தை பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னர் கண்டித்தும் அதற்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன், ரவி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் கே பி எஸ் எம் கனிவண்ணன், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் வி ஆர் ஏ அன்பு ஆகியோர் கலந்து கொண்டு தமிழக வெற்றி கழகத்தை பதவி ஏற்க மறுக்கும் தமிழக கவர்னர் கண்டித்தும், அதற்கு துணை போகும் மத்திய அரசு கண்டித்தும் கண்டன உரையாற்றினார். தொடர்ந்து தமிழக கவர்னரை கண்டித்தும் மத்திய அரசு கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானேர் பங்கேற்றனர்.













