திருவாரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்காத தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர்களும், இந்து முன்னணி வழக்கறிஞர்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கார்த்திகை தினமான நேற்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், வழக்கம்போல் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
இந்நிலையில் திருவாரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாஜக வழக்கறிஞர் சதீஷ்குமார் தலைமையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்காத தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர்களும், இந்து முன்னணி வழக்கறிஞர்களும், அகில பாரத வழக்கறிஞர் சங்க வழக்கறிஞர்களும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில பாரத வழக்கறிஞர் சங்க மாநில நிர்வாகி விஜயன், ரமேஷ் மாவட்ட இந்து முன்னணி வழக்கறிஞர் பிரிவு, டெல்லி பாபு மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.







