ஆறுமாவட்டங்களை சேர்ந்த பாஜகவினர் தேசம் காப்போம் என்ற தலைப்பில் கைகளில் தேசிய கொடிகளுடன் ஊர்வலம் – எச்.ராஜா துவங்கி வைத்தார் – தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வு நிர்வாக சீர்கேடு சட்டம் ஒழுங்கு மிகமோசமாக உள்ளது வண்டியில் ஏறி கையை ஆட்டிகொண்டு விஜய் சென்றால் மட்டும் போதாது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா வேலூரில் பேட்டி
வேலூர்மாவட்டம்,தோட்டப்பாளையத்திலிருந்து பாரதியஜனதா கட்சியின் சார்பில் தேசம் காப்போம் இந்தியாவில் ஆட்சிமாற்றத்தை கலவரத்து தூண்டி ஏற்படுத்த நினைக்கும் கயவர்கள் குண்டர்கள் கும்பல் ஆதிக்கத்தை ஒழிப்போம் .எஸ்.ஐ.ஆர் ஆதரிப்போம் என்ற தலைப்பில் ஊர்வலமானது நடைபெற்றது இதனை தோட்டப்பாளையம் பகுதியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா துவங்கி வைத்தார் இதில் பாஜக மாநில பொதுசெயலாளர் கார்த்தியாயினி,தமிழக இணை பார்வையாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அருணா,தேசிய பொதுகுழு உறுப்பினர் நரேந்திரன் நிர்வாகிகள்மாவட்டத்தலைவர்,தசரதன்,திருப்பத்தூர்மாவட்டத்தலைவர் தண்டபானி.கள்ளக்குறிச்சி முனைவர் பாலசுந்தரம் . திருவண்ணாமலை மாவட்டத்தலைவர் ரமேஷ் ,போளூர் கவிதா,மாநில செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இந்த ஊர்வலமானது 500-க்கும் மேற்பட்ட வேலூர்,திருவண்ணாமலை,ராணிப்பட்டேடை,திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி. உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கையில் தேசிய கொடிகளுடன் சென்று அண்ணா கலையரங்கம் அருகே நிறைவடைந்தது
பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறுகையில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் முறைகேடு என்றால் புகார் செய்ய வேண்டியது தானே ஆனால் ஒருவர் கூட புகார் செய்யவில்லை காரணம் இத்தாலியை பூர்வீகமாக கொண்டு ராகுல் காந்தி தான் பங்களாதேஷ் இஸ்லாமியர்களை இந்தியாவில் குடியுரிமைக்காக எப்படி அனுமதிக முடியும் அது தேச துரோகம் தமிழகத்தில் நிர்வாக கேடு விலைவாசி உயர்வு உள்ளது நிர்வாக சீர்கேடு உள்ள ஆட்சியாக ஜோசப் விஜய்யின் ஆட்சி உள்ளது சட்டம் ஒழுங்கும் மிகமோசமாக உள்ளது விஜய் வண்டியில் ஏறி கை அசைக்கலாம் ஆனால் ஒரே வீட்டில் 4 பேர் கொல்லப்பட்டது தமிழக அரசு சரியான முறையில் செயல்படவில்லை வரும் விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்க தடை விதிக்கப்படுகிறது இந்த தவெக ஆட்சியில் பதவியில் உள்ளவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் இது செக்குலர் அரசாங்கம் நம் இந்து பழக்க வழக்கங்களில் தலையிட கூடாது தமிழகத்தில் ஆளுங்கட்சி இந்துக்களை அடிமைப்படுத்திவிட்டோம் என்று உணர வைத்துள்ளனர் இது வன்மையாக கண்டிக்கதக்கது இந்து கோவில்களுக்குள் சென்றால் இந்து அடையாளங்களை இட்டுகொண்டு தான் கோவிலுக்கு செல்ல வேண்டும் இந்து மதத்தினை அழித்துவிட்டோம் என்று சொல்ல கூடாது என கூறினார்
பேட்டி:எச்.ராஜா (பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்)







