தீபாவளி திருநாளை முன்னிட்டுஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியில் ஆவடி கிழக்கு பகுதி மகளிர் அணி ஜெயசுதா அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் குமார் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பட்டாசு வேட்டி சேலை இனிப்புகள் மற்றும் பிரியாணி போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
பின்ன செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் குமார்
விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் அனைவரும் பட்டாசு வெடிக்கும் பொழுது அருகில் தண்ணீர் மணல் போன்றவை வைத்துக் கொண்டு பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்றும் தூய்மை பணியாளர்களுடன் தீபாவளி கொண்டாடுவது மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்








