செங்கல்பட்டு வெயிலுடன் கூடிய திடீரென கனமழை. பொதுமக்கள் அவதி.
வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் , லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
- சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது குறிப்பாக
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் மற்றும் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் வெயிலுடன் கூடிய திடீர் மழை பெய்தது .
வெப்பச்சலனம் மற்றும் மேகமூட்டம் காரணமாக இப்பகுதிகளில் திடீர் மழை பெய்து வருகிறது







