மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மின்வெட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவதால் மும்முனை மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய விவசாயிகள் கோரிக்கை:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இளம்பரிதி என்ற விவசாயி பேசுகையில் மின்வெட்டு உள்ளதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் தங்கு தடை இன்றி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 144 பணியாளர்கள் நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆறு மாதங்கள் ஆகியும் அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை காரணம் என்ன உடனடியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனியார் உரக்கடைகளில் ஒவ்வொரு கடையிலும் உரங்கள் கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தரக்கட்டுப்பாட்டு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாரா, இல்லையா நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உடனடியாக கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் விற்பனையை முடக்க உத்தரவிட்டார். நடுக்கரை ஊராட்சியில் மூன்று மின்கம்பங்கள் சாய்ந்து நான்கு நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எங்கே உள்ளது. மாவட்டம் உருவாகி 7 ஆண்டுகள் ஆகியும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் கொண்டுவரப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேலும் விவசாயிகள் கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பெரும்பாலான விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.













