September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கள்ளக்காதலுக்கு இடையூறான கணவனை ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கொன்று நாடகமாடிய மனைவி

by sowmiarajan
January 8, 2026
in News
A A
0
கள்ளக்காதலுக்கு இடையூறான கணவனை ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கொன்று நாடகமாடிய மனைவி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்துவிட்டு, மாரடைப்பு என நாடகமாடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் கைது செய்துள்ளனர். நிஜாமாபாத் மாவட்டம் போர்கான் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரமேஷ் (35) என்பவரது மனைவி சவுமியா (30). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், சவுமியா பணிபுரியும் தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திலீப் (28) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது முறையற்ற உறவைக் கணவர் ரமேஷ் கண்டித்ததால், அவரைத் தீர்த்துக்கட்டச் சவுமியா திட்டமிட்டுள்ளார்.

சவுமியாவின் கணவர் ரமேஷ் தனது பெயரில் ரூ.2 கோடி மதிப்பிலான ஆயுள் காப்பீடு (Life Insurance) செய்திருந்தது கள்ளக்காதலர்களுக்குத் தெரியவந்துள்ளது. கணவனைக் கொன்றுவிட்டால் கள்ளக்காதலுக்கு இருந்த தடையைச் சரிசெய்வதோடு, காப்பீடு தொகையையும் பெற்று ஜாலியாக வாழலாம் எனச் சவுமியா ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதற்காகத் திலீப்பின் தம்பி அபிஷேக் மூலமாக ஜிதேந்திரா என்ற ரவுடி கும்பல் தலைவனுக்கு ரூ.35 ஆயிரம் பேசி கூலிப்படையாக அமர்த்தியுள்ளனர். ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன் ரமேஷை விபத்தில் கொல்ல முயன்று அவர் உயிர் தப்பிய நிலையில், கடந்த டிசம்பர் 19-ம் தேதி சவுமியா தனது திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார்.

சம்பவத்தன்று இரவு கணவர் ரமேஷுக்குத் தூக்க மாத்திரைகளைத் தண்ணீரில் கலந்து கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார். அவர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த போது, கள்ளக்காதலன் திலீப் மற்றும் ரவுடி கும்பலை வீட்டுக்கு வரவழைத்து, துணியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். மறுநாள் காலையில், தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்து, ரமேஷின் உடலை அவசர அவசரமாக அடக்கம் செய்து சவுமியா நாடகமாடினார்.

கொலை செய்யப்பட்ட ரமேஷின் தம்பி கோதாரி வெளிநாட்டில் இருந்ததால், இறுதிச் சடங்கின் புகைப்படங்கள் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்தப் புகைப்படங்களைத் தீவிரமாகப் பார்த்தபோது ரமேஷின் கழுத்தில் கயிறு போன்ற தடம் மற்றும் காயங்கள் இருப்பதை அவர் கவனித்தார். இதனால் சந்தேகமடைந்த அவர், தனது மனைவி மூலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செய்தார். போலீசார் சவுமியாவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், காப்பீடு பணத்திற்காகவும் கள்ளக்காதலுக்காகவும் கணவனைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, வட்டாட்சியர் முன்னிலையில் ரமேஷின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தச் சதித் திட்டத்தில் தொடர்புடைய சவுமியா, கள்ளக்காதலன் திலீப், அபிஷேக் மற்றும் ரவுடி கும்பலைச் சேர்ந்த ஜிதேந்தர், ஸ்ரீராம், ராகேஷ் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரூ.2 கோடி பணத்திற்காகக் கணவனைக் கொன்று 3 குழந்தைகளைத் தவிக்கவிட்ட தாயின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: crimeFraud IllicitHomicide MurderInsuranceINVESTIGATION
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கொடைக்கானல் வன ஆக்கிரமிப்புத் தாவரங்கள் அகற்றும் அரசாணைக்கு இடைக்காலத் தடை

Next Post

மதுரை ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவு

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
மதுரை ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவு

மதுரை ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.