குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார் -குடியாத்தம் பகுதியில் வீட்டில் 500 கிராம் கஞ்சா ஒருவர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக குடியாத்தம் மதுவிலக்கு போலீசாருக்கு அந்த ரகசிய தகவலின் பெயரில் விரைந்து சென்ற குடியாத்தம் மதுவிலக்கு போலீசார் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அப்போது குடியாத்தம் ரயில் நிலையம் மூன்றாவது தளத்தில் மூட்டை ஒன்று அனாதையாக இருப்பதை பார்த்த மதுவிலக்கு போலீசார் அதனை பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 6.5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. உடனடியாக பறிமுதல் செய்த கஞ்சாவை மதுவிலக்கு காவல் நிலையம் எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அதேபோல் குடியாத்தம் நகர காவல் துறையினருக்கு சித்தூர் கேட் ஷெரிப் நகர் பகுதியில் விற்பனைக்காக வீட்டில் பேக்கிங் செய்து கொண்டிருந்த சுமார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து முஜாகித் என்பவரை கைது செய்து விசாரணை தொடர்ந்து குடியாத்தம் ரயில் நிலையம், குடியாத்தம் நகரப் பகுதியில் தொடர்ந்து கஞ்சா பறிமுதல் செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.







