’16 சைக்’ என்ற விண்கல்லில் தங்கமும், பிளாட்டினமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடையே இருக்கின்றது.
இதை ஆய்வு செய்ய நாசா சார்பில் 2023ல் அக்டோபர் மாதம் விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. தற்போது இது 2 கோடி கி.மீ-ஐ கடந்திருக்கிறது. விரைவில் செவ்வாய் கிரகத்தை நெருங்கி, பின்னர் அங்கிருந்து ’16 சைக்’ விண்கல்லை நோக்கி பயணிக்கும். இந்த விண்கல்லில் உள்ள அரிய உலோகங்களின் மதிப்பு மிக மிக அதிகம் என்று சொல்லபடுகிறது.
இதன் மொத்த மதிப்பு $100,000 குவாட்ரில்லியன் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதை முதலில் ஆய்வு செய்து, பின்னர் அங்கிருந்து அந்த உலோகங்களை வெட்டி எடுக்க முயற்சித்தாக வேண்டும்.
ஆனால் இதெல்லாம் சாத்தியமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏன்யென்றால், இந்த விண்கல் 1852ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இன்னும் அங்கு விண்கலத்தை கூட அனுப்பமுடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.