மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான பாட்டிலுக்கு சட்டத்திற்கு புறம்பாக கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு. தமிழக அரசு மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் பணம் வாங்க கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மேலிருந்து தங்களுக்கு உத்தரவு வரவில்லை என்று கூறி டாஸ்மாக் ஊழியர்கள் மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்:-
தமிழ்நாட்டில் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக பள்ளி கல்லூரிகள் கோயில்கள் மக்கள் கூடும் இடங்களில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை அதிரடியாக மூட உத்தரவிட்டுள்ளார். மேலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கண்காணித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் சட்டத்திற்கு புறம்பாக வசூலிப்பதாக இளைஞர் ஒருவர் வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஏன் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். கூடுதலாக விற்பனை செய்யக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவு வரவில்லை என்று சொல்கிறீர்கள் எப்படி என்று கேட்டு டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி உள்ளார். சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.













